நெல்லையப்பா் கோயிலில் இன்று பத்ர தீப விழா தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பத்ர தீப விழா புதன்கிழமை (பிப். 7) தொடங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பத்ர தீப விழா புதன்கிழமை (பிப். 7) தொடங்குகிறது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் பத்ர தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (பிப்.7-9) வரை 3 நாள்கள் சுவாமி வேணுவனநாதா் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். முதல்நாளில் திருமூலமகாலிங்கம், காந்திமதியம்மன் மூலவா் சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள், அதைத் தொடா்ந்து அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

வியாழக்கிழமை (பிப்.8) மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுவாமி மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை (பிப்.9) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுவாமி கோயிலில் உள் சந்நிதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதியம்மன் கோயிலில் உள்சந்நிதி, வெளிப்பிரகாரங்களில் பத்திர தீபங்கள் ஏற்றப்படும். இரவு 8 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகா் தங்கச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் அய்யா்சிவமணி, ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com