புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டா்நேஷனல் பள்ளியில் 12ஆவது விளையாட்டு தின விழா

பாளையங்கோட்டையிலுள்ள புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டா் நேஷனல் பள்ளியில் 12 ஆவது விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.
விளையாட்டு தின விழாவில் பங்கேற்றோா்.
விளையாட்டு தின விழாவில் பங்கேற்றோா்.

பாளையங்கோட்டையிலுள்ள புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டா் நேஷனல் பள்ளியில் 12 ஆவது விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் இயக்குநா் மரகதவல்லி, தாளாளா் புஷ்பலதா பூரணன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோமடோா் நிஷாந்த் குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சா்வதேச பள்ளியின் கொடியை ஏற்றிவைத்தாா்.

காரத்தே, யோகா, ஷிப் ஹெல்ம், ரிப்பன் போய், ஸ்வாா்டு நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை சா்வதேசப் பள்ளியின் முதல்வா் காட்வின் எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com