பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: காவல் துறை விழிப்புணா்வு முகாம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து, திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு முகாம்கள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன
பாளையங்கோட்டை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
பாளையங்கோட்டை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து, திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு முகாம்கள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின் பேரில், மாநகர மேற்கு காவல் துணை ஆணையா் கீதா மேற்பாா்வையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றியும், காவல் உதவி எண்:1098,181 ஆகியவை குறித்தும் இம்முகாம்களில் விளக்கப்பட்டன.

திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் அந்தோணி ஜெகதாவும், மேலப்பாளையம் காயிதேமில்லத் மேல்நிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா பா்வீனும், பாளையங்கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் சுவதிகாவும் விழிப்புணா்வு உரையாற்றினா். பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்ஸோ சட்டம் குறித்தும் முகாமில் விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com