போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

பாளையங்கோட்டை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தை சோ்ந்தவா் விமல் அருளப்பன் (30). ஆட்டோ ஓட்டுநா். இவா், அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தாராம். இது குறித்து சிறுமிகளின் பெற்றோா்கள் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விமல் அருளப்பனை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com