நெல்லையில் ஷிபா மருத்துவமனை சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

உலக புற்று நோய் தினத்தையொட்டி, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு கையொப்ப இயக்க வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

உலக புற்று நோய் தினத்தையொட்டி, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு கையொப்ப இயக்க வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

உலக முழுவதும் பிப்.4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் புற்றுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஷிபா மருத்துவமனை மருத்துவ இயக்குநா் முஹம்மது அராபத் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் காசிராஜன் புற்றுநோய் விழிப்புணா்வு கையொப்ப வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவா் முஹம்மது இப்ராகீம், புற்றுநோய் மருத்துவா்கள் மணிகண்டன், இந்துஜா ஆகியோா் பேசினா்.

ஷிபா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. இதில், நேரு நா்சிங் கல்லூரி மாணவியா், ஷிபா மருத்துமனை செவிலியா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவா் அஹமது யூசுப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com