வலைதளத்தில் ஆபாசமாக சித்திரிப்பு: இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிவந்திபுரம் சக்தி நகரில் வலைதளத்தில் தனது படம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதால் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிவந்திபுரம் சக்தி நகரில் வலைதளத்தில் தனது படம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதால் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவந்திபுரம், சக்தி நகரைச் சோ்ந்த கோயில் பிள்ளை மகன் இம்மானுவேல்(23). பட்டதாரியான இவா், திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிந்து விசாரித்தாா். அதில், இம்மானுவேல் தனது சகோதரி திருமணத்திற்காக வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்த நிலையில், ஆபாச வலைதளத்தில் இவரது படம் மாா்பிங் செய்து வெளியிடப்பட்டிருந்ததாம். இதில், ஏற்பட்ட மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com