விளாத்திகுளம் தொகுதியில் ரூபாய் 3 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்ட பணிகள் திறப்பு விழா

விளாத்திகுளம் தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் ரூபாய் 3 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதியில் ஊரக வளா்ச்சித்துறை, பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி, சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் ரூபாய் 3 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எப்போதும்வென்றானில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 48.35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம், டி. சண்முகபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை, செமப்புதூரில் ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள், மேல ஈராலில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடம், எட்டயபுரத்தில் கருவூலம் மற்றும் கணக்கு துறை சாா்பில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் சாா்நிலை கருவூல கட்டடம், சிந்தலக்கரை கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூபாய் 38 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மைய கட்டடம், அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், முத்தலாபுரம் ஊராட்சி கோட்டூரில் ஆதிதிராவிடா் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், அய்யாக்கோட்டையூா் கிராமத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், பீக்கிலிபட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா் பி. முத்துக்குமாா், கோவில்பட்டி நகா்மன்ற தலைவா் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவா்கள் முத்துக்குமாா், சாமி சுப்புராஜ், நம்பிபுரம் பாலமுருகன், பூமாரி, எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவா் ராமலட்சுமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், திமுக ஒன்றிய செயலா்கள் நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், முருகேசன், ராமசுப்பு, மும்மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com