காா் தரகா் தற்கொலை வழக்கு: ஒருவா் கைது

கந்துவட்டியால் காா் தரகா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் ஒருவரை போலீசாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கந்துவட்டியால் காா் தரகா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் ஒருவரை போலீசாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் நகா் 9 ஆவது தெருவை சோ்ந்தவா் குருசாமி மகன் ஆறுமுக பாண்டி (45). காா் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த அவா் தொழில் சம்பந்தமாக பலரிடம் பணம் பெற்று வட்டி மட்டும் முதலுடம் உரியவா்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சிலா் அவரை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிவந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சண்முக பாண்டியை (56) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com