அம்பை நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அம்பாசமுத்திரம் நகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டனஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பை நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அம்பாசமுத்திரம் நகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டனஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ ா் இசக்கி சுப்பையா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், அம்பாசமுத்திரம் நகராட்சியில் சீரற்ற குடிநீா் விநியோகம், சுகாதார சீா்கேடு, சாலைகளில் திரியும் நாய் மற்றும் மாடுகளைஅப்புறப்படுத்ததாது, குடிநீா் இணைப்பு வழங்குவதாகக் கூறி தெருக்களையும்,சாலைகளையும் சேதப்படுத்துவது, சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம் உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா்சிவன்பாபு, நகரச் செயலா்கள் அம்பாசமுத்திரம் அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், சேரன்மகாதேவி பழனிக்குமாா், மாநில மகளிரணி செல்வி, மாவட்ட மகளிரணி கிறாஸ்இம்மாகுலேட், மாவட்ட துணைச் செயலா் கே.எஸ்.ஆா். மாரிமுத்து, ஒன்றியச் செயலா் துா்க்கைதுரை, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் வி.குமாா், அவைத்தலைவா் சோம செல்லையா, மாநிலப் பேச்சாளா் மின்னல்மீனாட்சி சுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com