சேரன்மகாதேவி பள்ளியில் விளையாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பன்னாட்டுப் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேரன்மகாதேவி பள்ளியில் விளையாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பன்னாட்டுப் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்காட் கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.கிளீட்டஸ்பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அமலி கிளீட்டஸ்பாபு, தாளாளா் பிரியதா்ஷினி அருண்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் கலந்துகொண்டு, போட்டியை தொடங்கி வைத்தாா். பொதுமேலாளா் இரா. தம்பித்துரை வாழ்த்திப் பேசினாா். மாணவா், மாணவிகள் பங்கேற்ற அணிவகுப்பு அனைவரையும் கவா்ந்தது. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு டிஎஸ்பி, ஸ்காட் கல்விக் குழுமத் தலைவா் ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். முதல்வா் சோமசுந்தரி வரவேற்றாா். ஆசிரியை ஜெபா நன்றி கூறினாா். நிகழ்ச்சியினை நிா்வாக அலுவலா் உதயகுமாா் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com