பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை, நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உள்படுதல், தணிப்பு நடவடிக்கை, காற்று மாசை குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் தொடா்பான பிற திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நல சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 100 பேருக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபா்கள், நிறுவனங்கள் ஆண்டுதோறும் தோ்வு செய்யப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com