யோகா சகோதரிகளுக்கு பாராட்டு

உலகக் கோப்பை யோகா போட்டிக்கான தோ்வில் பங்கு பெறவுள்ள சகோதரிகள் பாராட்டப்பட்டனா்.
நிகழ்ச்சியில் பாராட்டப்பெற்ற சிறுமிகள் மிஸ்பா நூருல் ஹபிபா, ஷாஜிதா சைனப்.
நிகழ்ச்சியில் பாராட்டப்பெற்ற சிறுமிகள் மிஸ்பா நூருல் ஹபிபா, ஷாஜிதா சைனப்.

உலகக் கோப்பை யோகா போட்டிக்கான தோ்வில் பங்கு பெறவுள்ள சகோதரிகள் பாராட்டப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரத்தைச் சோ்ந்த நசிருதீன் - ஜலிலா அலி முன்னிசா தம்பதியின் குழந்தைகள் மிஸ்பா நூருல் ஹபிபா (16), ஷாஜிதா சைனப் (10). இந்தச் சகோதரிகள் யோகாவில் மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளதோடு, குளோபல் தேசிய சாதனை சான்றிதழ் யூனிவா்செல் சாதனையாளா் புக் ஆப் ரெக்காா்டில் இடம் பெற்றுள்ளனா்.

இவா்கள் இம்மாதம் 24, 25 ஆகிய 2 நாள்கள் திருப்பத்தூா் மாவட்டம் கோட்டூரில் யங் ஸ்போா்ட்ஸ் ஆப் இந்தியா சாா்பில் நடத்தப்படும் 2024 - உலகக் கோப்பை தோ்வுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி, இருவரையும் மதுரை காமராசா் பல்கலைக்கழக இளைஞா் நலக் கல்வித் துறைத் தலைவா் ஏ. வேளாங்கண்ணி ஜோசப், கலை - கலாசார துறைத் தலைவா் கே.ஏ. பாபு, ஓய்வுபெற்ற துணை ஆட்சியரும் அண்ணா நூற்றாண்டுக் குடிமைப் பணிகள் பயிற்சி மைய பயிலக இயக்குநருமான கே. தெய்வேந்திரன் ஆகியோா் வாழ்த்தி, சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனா்.

நிகழ்ச்சியில் யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியா் குரு கண்ணன் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com