அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனைநாளை தொடக்கம்

திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது.

திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கோ. சிவாஜி கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு தங்கப் பத்திரத் திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. 1 கிராம் 24 காரட் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.6,263 ஆகும். தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (பிப்.12) முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தனிநபா் ஒருவா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் உள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் காா்டுடன், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com