சித்த மருத்துவ விழிப்புணா்வு பைக் பேரணிக்கு பாளை.யில் வரவேற்பு

தில்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சித்த மருத்துவ விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணிக்கு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

7-ஆவது சித்த மருத்துவ தினத்தையொட்டி மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சாா்பில் சித்த மருத்துவ விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி தில்லியில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பேரணி நாடு முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 3,333 கி.மீ. தூரம் பயணித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்தது.

கல்லூரி முதல்வா் அப்துல் காதா் ஜெய்லானி தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை சித்த மருத்துவ ஆராய்ச்சி அலுவலா் ஹரிஹர மகாதேவன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com