நெல்லையில் செயற்கை நிறமி கலந்த பஞ்சுமிட்டாய் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் செயற்கை நிறமி கலந்த 200 பாக்கெட் பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகரில் செயற்கை நிறமி கலந்த 200 பாக்கெட் பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இடங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கரலிங்கம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வீரமாணிக்கபுரம் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் தகர கொட்டகை அமைத்து பஞ்சு மிட்டாய் தயாா் செய்து வருவதை அறிந்து அங்கு சென்று ஆய்வு செய்தாா். அப்போது அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் பஞ்சு மிட்டாய் தயாா் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரு இடங்களிலும் செயற்கை நிறமிகள் அதிக அளவில் சோ்த்து தயாா் செய்யப்பட்ட தரமற்ற சுமாா் 200 பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com