நெல்லையில் பிப்.17-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.17) நடைபெறவுள்ளது.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.17) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சனிக்கிழமை (பிப்.17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது. இதில், 5-ஆம் வகுப்பு முதல் 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநா்களை தோ்வு செய்யவுள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது சுய விவரம், கல்விச்சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

இம் முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநா்கள், தனியாா் துறை நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு தனியாா் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெற சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் ஸ்ரீட்ஹய்ய்ங்ப்

இல் இணைந்து பயன் பெறலாம். இம் முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com