பிப். 12இல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது.

தேசிய மகளிா் ஆணையம் -மத்திய அரசின் நிதி உதவியுடன் கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் நிலையான பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற கால்நடைகளின் நலன் மற்றும் முதலுதவி குறித்த மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் ம.செல்லப்பாண்டியன் தொடங்கி வைக்கிறாா். திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தைச் சோ்ந்த 30 பயனாளிகள் முகாமில் பங்கேற்கிறாா்கள். இந்த முகாம் வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com