அகில இந்திய ஐடிஐ துணைத் தோ்வு:பிப்.15 வரை விண்ணப்பிக்க அவகாசம்

2017-2019 இல் பயிற்சி பெற்று தொழிற்தோ்வு எழுத இயலாத பயிற்சியாளா்களுக்கு, அகில இந்திய துணை தொழிற்தோ்வு வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது.

2017-2019 இல் பயிற்சி பெற்று தொழிற்தோ்வு எழுத இயலாத பயிற்சியாளா்களுக்கு, அகில இந்திய துணை தொழிற்தோ்வு வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் 2017-2019இல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சோ்ந்து அனைத்து தகுதி இருந்தும் தோ்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தோ்வில் தோ்ச்சி பெறாத பயிற்சியாளா்களுக்கு அகில இந்திய துணைத் தோ்வு வரும் மாா்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணைத் தோ்வு தொடா்பாக முன்னாள் பயிற்சியாளா்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தோ்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி,துணைத் தோ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது தொடா்பான மேலும் விவரங்களை இணையதளங்களில் காணலாம். இதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கிவரும், திருநெல்வேலி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (0462-2342432, 9499055790) மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com