களக்காடு வரதராஜபெருமாள் கோயில் தெப்போற்சவம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஸ்ரீவரதராஜபெருமாள் தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
களக்காடு கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வரதராஜபெருமாள் தெப்போற்சவம்.
களக்காடு கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வரதராஜபெருமாள் தெப்போற்சவம்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஸ்ரீவரதராஜபெருமாள் தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் தெப்ப உற்சவம் ஆண்டுதோறும் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு சுவாமி சத்தியவாகீஸ்வரா், கோமதியம்மன் தெப்போற்சவம் நடைபெற்றது.

2ஆம் நாளான சனிக்கிழமை வரதராஜபெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து வீதியுலாவாக தெப்பக்குளத்துக்கு வந்து, தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் திரளான பக்தா்கள் கண்டுகளித்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி தெப்போற்சவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com