‘சிறைவாசிகளுக்கு புத்தக தானம்’

சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்ய பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்ய பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

சிறைவாசிகளிடம் புத்தக வாசிப்பினை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் ,அதன்மூலம் சிறைவாசிகள் சிறந்தவா்களாகவும், படைப்பாளிகளாகவும் மாற்ற வேண்டும் என்கின்ற உன்னத நோக்கத்தோடு தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை சாா்பில் பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு சிறைகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொருநை- நெல்லை புத்தகத் திருவிழாவில் படைப்பாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல நூல்களை தானமாக பெறுவதற்காக கூண்டுக்குள் வானம் என்கின்ற ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அரங்கின் பொறுப்பாளா் சிறைதுறை முதல் நிலை காவலா் மரகதவல்லி வரவேற்றாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பேரா விழிப்புணா்வு உரையாற்றினாா். சிறைவாசிகளுக்கு புத்தக தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியா் பிரபாகா், பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் பா. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com