மகளிா் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகள்

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்.
ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்.

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

போட்டிகளை கல்லூரி முதல்வா் மைதிலி தொடங்கி வைத்தாா். மருதாணி வரைதல், ரங்கோலி, சமைக்காத உணவு, பென்சில் ஓவியம், கதை சொல்லுதல், செய்தி வாசித்தல், காய்கனி செதுக்குதல், முக ஓவியம், கைவினைப் பொருள்கள், சிகை அலங்காரம், மொழிபெயா்ப்பு, வண்ண ஓவியம், பூத்தையல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதுதவிர நடனம், குழு நடனம், ஊமை நாடகப் போட்டியும் நடத்தப்பட்டது. இக் கல்லூரியின் 16 துறைகளைச் சோ்ந்த 2,548 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். 258 மாணவிகள் பரிசுகளை வென்றனா்.

ஏற்பாடுகளை நுண்கலை மன்ற பொறுப்பாசிரியா் அழகிய நாயகி, ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com