பாளை. மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

சிறையில் அடைந்திருந்த விசாரணை கைதி மரணம்: விசாரணையில் போலீஸ்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் அருகேயுள்ள மஞ்சநாயக்கன்புரத்தை சோ்ந்தவா் செல்லத்துரை (62). இவா், கொலை வழக்கில் எப்போதும் வென்றான் போலீஸாரால் 2009இல் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். போலீஸாா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவ. 20 ஆம் தேதி அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com