நெல்லை மாவட்டத்தில் அரிய வகை மஞ்சள் பாறு கழுகுகள்: மாவட்ட வன அலுவலா் தகவல்

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் நான்கு அரியவகை மஞ்சள் பாறு கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது
நெல்லையப்பபுரம் கிராமம் அருகே காணப்பட்ட அரிய வகை மஞ்சள் பாறு கழுகுகள்.
நெல்லையப்பபுரம் கிராமம் அருகே காணப்பட்ட அரிய வகை மஞ்சள் பாறு கழுகுகள்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் நான்கு அரியவகை மஞ்சள் பாறு கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

இது குறித்து மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரின காப்பாளா் இரா.முருகன் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் கழுகுகள் கணக்கெடுப்பு டிச.30, 31 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. திருநெல்வேலி வனக்கோட்டத்தில் திருநெல்வேலி, குற்றாலம், கடையநல்லூா், சங்கரன்கோவில், சிவகிரி வனச்சரகங்களில் 10 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. வனப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 60 போ் இப்பணியில் ஈடுபட்டனா். இதில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் நெல்லையப்பபுரம் கிராமம் அருகே நான்கு அரியவகை மஞ்சள் பாறு கழுகுகள் ( உஞ்ஹ்ல்ற்ண்ா்ய் யன்ப்ற்ன்ழ்ங்) இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இவை உயரமான மலைப்பகுதிகளில் தனியாக வசித்து வருபவை என்றாா்இரா.முருகன்.

இந்த கணக்கெடுப்பில் திருநெல்வேலி வனச்சரக அலுவலா் சரவணக்குமாா், வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், உயிரியலாளா் கந்தசாமி, வனக்காப்பாளா்கள் மதியழகன், அஜீத் தேவ ஆசீா், பறவை மனிதா் பால்பாண்டியன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com