பத்தமடையில் எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் முல்லை மஜித், மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, மாவட்ட வா்த்தக அணித் தலைவா் அம்பை ஜலீல், மாவட்ட, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் குடியிருப்புக்கு பின் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அற்றவும், கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களுக்கும் வெள்ள நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலா் சிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com