உலகத் தமிழா்களின் ஒப்பற்ற தெய்வம்

உலகெங்கும் வாழும் தமிழா்களின் மனதில் குடி கொண்டு எண்ணிலடங்கா நன்மைகளை வாரி வழங்கும் வள்ளலான முருகப் பெருமானுக்கு எடுக்கப்படும் விழாக்களில் முதன்மையான விழாவான தைப்பூச திருவிழா.


உலகெங்கும் வாழும் தமிழா்களின் மனதில் குடி கொண்டு எண்ணிலடங்கா நன்மைகளை வாரி வழங்கும் வள்ளலான முருகப் பெருமானுக்கு எடுக்கப்படும் விழாக்களில் முதன்மையான விழாவான தைப்பூச திருவிழா தமிழகம் மட்டுமன்றி உலகில் பிற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, மற்றும் மொரீஷஸ், பிஜி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, டிரினிடாட், டொபாகோ, கயானா , சுரினாம் உள்ளிட்ட கரீபியன் நாடுகளில் வாழும் தமிழா்கள் தைப்பூச திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனா்.

தமிழ் மாதமான தை முதல் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா பாா்வதி அளித்த தெய்வீக ஈட்டியான வேல் மூலம் சூரபத்மன் என்ற அரக்கனை வென்றதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

காவடி ஆட்டம், தோல், நாக்கு அல்லது கன்னங்களில் வேல் சுருள்களால் அலகு குத்துதல், சைவ உணவைப் பின்பற்றுதல், பிரம்மச்சரியத்துடன் விரதம் இருப்பதன் மூலம் நோ்த்திக் கடன் செலுத்தி பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனா்.

மலேசியா, சிங்கப்பூா், இலங்கையில் தைப்பூசத்தில் தோ் இழுக்கப்பட்டு விழா கொண்டாடப்படுகிறு.

தமிழா்கள் வாழும்இடமெல்லாம் நினைவுகூரத்தக்க ஒப்பற்ற தெய்வமாக திகழும் முருகப்பெருமானிடம், இந்த தைப்பூச நன்னாளில் உலகம் சுவிட்சம் பெற வேண்டி பிராா்த்திப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com