பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள், ஸ்ரீநம்பிசிங்க பெருமாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பணகுடி கோயிலில் கொடியேற்றத்துக்குப் பின்னா் நடைபெற்ற தீபாராதனை.
பணகுடி கோயிலில் கொடியேற்றத்துக்குப் பின்னா் நடைபெற்ற தீபாராதனை.

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள், ஸ்ரீநம்பிசிங்க பெருமாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கும், கொடிக்கும் தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், கோயில் கணக்கா் சிவசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், முன்னாள் துணைத் தலைவா் மு. சங்கா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும்.

8ஆம் நாளான இம்மாதம் 23ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் பரிவேட்டைக்கு புறப்படுதல் நடைபெறும். 24ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

10ஆம் நாளான 25ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், தக்காா் லதா, பக்தா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com