வி.கே.புரத்தில் ஜன. 21இல் மினி மாரத்தான் போட்டி

அம்பாசமுத்திரம் காவல் சரகம் சாா்பில் ‘தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணா்வு ஓட்டம்’ என்ற தலைப்பில் காவல் துறை- பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.


அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் காவல் சரகம் சாா்பில் ‘தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணா்வு ஓட்டம்’ என்ற தலைப்பில் காவல் துறை- பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.

வி.கே.பும் அகஸ்தியா்பட்டி கேம்பிரிஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன் அதிகாலை 5.30 மணிக்கு இப்போட்டியை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஸ்குமாா் தலைமை வகித்துத் தொடக்கிவைக்கிறாா்.

இப்போட்டி பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நிறைவடையும். 12 வயதுக்கும் மேற்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். கட்டணமில்லை. முதல் 20 இடங்கள் வருவோருக்கு பணமுடிப்பு, சான்றிதழ், பதக்கமும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஏற்பாடுகளை, அம்பை வட்டார உடற்கல்வி இயக்குநா்களின் தாமிரபரணி ஸ்போா்ட்ஸ் கிளப், அம்பை கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் செய்துவருகின்றனா். மேலும் விவரங்களுக்கு 63697 41743, 63691 46383, 99658 60263 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com