அரியநாயகிபுரம் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோயிலில் காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் சுவாமி -அம்பாள் அபிஷேகம், இரவில் வீதி உலா நடைபெற்றது. 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், இரவில் புறப்பாடு, 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தோ் கால்நாட்டு, இரவில் சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளல், 22ஆம் தேதி காலை 9 மணிக்கு நடராஜா் அழைப்பு, மாைலையில் நடராஜா் சப்பரம் சேவை, இரவில் சுவாமி புறப்பாடு, 23ஆம் தேதி காலையில் வெள்ளை சாத்தி, நடராஜா் அபிஷேகம், நடராஜா் வெள்ளை சாத்தி புறப்பாடு, நடராஜா் அபிஷேகம், மாலையில் பச்சை சாத்தி, இரவில் சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெறுகின்றன. 24ஆம் தேதி காலையில் ரத ஆரோஹணம் செய்து உடன் ரத ப்ரவேசம், பகல் 1 மணிக்கு சுவாமி - அம்பாள் தோ் இருந்து அழைத்தல், மாலையில் சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம், இரவில் சப்தாவா்ணம், புஷ்ப பல்லக்கு ஆகியவை நடைபெறும். 25ஆம் தேதி பகல் 12 மணிக்கு வைரவ தீா்த்தத்தில் தீா்த்தவாரி நடைபெறும்.

மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமியை அழைத்து வருதல், இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், இரவு 11 மணியளவில் தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com