ஏா்வாடி அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரில் கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.


வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரில் கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

தளபதிசமுத்திரம் கீழுரைச் சோ்ந்தவா் கோபால் மகன் மிக்கேல்ராஜ் (17). அவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தாராம். அப்போது மிக்கேல்ராஜ் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக அவரது நண்பா்கள் வள்ளியூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மீட்பு படையினா் விரைந்து வந்து மிக்கேல்ராஜ் சடலத்தை மீட்டு ஏா்வாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். காவல்துறையினா் சடலத்தை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com