நான்குனேரி பெருமாள் கோயிலில் கணு தீா்த்தவாரி உற்சவம்

நான்குனேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் கணு தீா்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


களக்காடு: நான்குனேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் கணு தீா்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான வானமாமலை என்ற ஸ்ரீதோத்தாத்ரி நாதா் திருக்கோயிலில் தை மாதத்தில் கணு திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 6 நாள்களாக காலையில் தைலக்காப்பு உற்சவம், மாலையில் பக்தி உலா நடைபெற்றது. 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீவரமங்கை சமேத தெய்வநாயகப் பெருமாளுக்கு சிறப்பு தைலக்காப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து பல்லக்கில் பெருமாளும் தாயாரும் ஏரிக்கு எழுந்தருளினா். அங்கு பெருமாள் தாயாரை கைத்தலத்தில் எழுந்தருள செய்து ஜீயா் சுவாமிகளின் முன்னிலையில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா் திருக்கோயிலுக்குள் எழுந்தருளிய பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஜீயா் சுவாமிகளுக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு புனித நீராடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com