ரயில் பயணச்சீட்டு மையத்தில் மக்கள் கூட்டம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க செவ்வாய்க்கிழமை காத்திருந்த பயணிகள்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க செவ்வாய்க்கிழமை காத்திருந்த பயணிகள்.


திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 14 ஆம் தேதி முதல் புதன்கிழமை (ஜன. 17) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூா் உள்பட பல்வேறு வெளிமாவட்டங்களில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக சொந்த ஊா்களுக்கு வந்துள்ளனா். அவா்கள் அனைவரும் புதன்கிழமை மீண்டும் திரும்பிச் செல்ல பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை பயணத்திற்காக தட்கல் பயணச்சீட்டு எடுப்பதற்காக ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை காத்திருந்தனா். இதேபோல முன்பதிவு மையத்திலும் கூட்டம் அதிகமிருந்தது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் போதுமானதாக இல்லை. ஆகவே, சென்னை மற்றும் கோவை பகுதிகளுக்கு கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டியது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com