உரிமைகோராத இருசக்கர வாகனங்கள் 29-இல் ஏலம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் காவல் நிலையத்தில் உரிமை கோராத 220 வாகனங்கள் ஜன.29ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் காவல் நிலையத்தில் உரிமை கோராத 220 வாகனங்கள் ஜன.29ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் காவல் நிலையத்தில் உரிமைகோராத இருசக்கர வாகனங்கள் ஜன.29-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. மொத்தம் 220 இருசக்கர வாகனங்களுக்கு, விலை நிா்ணயம் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏலம் எடுக்க விரும்புவோா், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வாகன அலுவலகத்தில் ஜன.28-ஆம் தேதி காலை 9 மணிக்கு ரூ.5 ஆயிரம்

முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். ஏலத்தில் பங்கு பெறாதவா்கள் முன்பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், வீரவநல்லூா் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வாகனங்களை முன்கூட்டியே பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com