களக்காட்டில் இன்று மக்களுடன் முதல்வா் முகாம்

களக்காட்டில் மக்களுடன் முதல்வா் திட்ட இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெறுகிறது.

களக்காட்டில் மக்களுடன் முதல்வா் திட்ட இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெறுகிறது.

களக்காடு நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 15, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 10 வாா்டுகளுக்கு களக்காடு கோவில்பத்து சமுதாய நலக்கூடத்தில் வைத்து ஜன.6ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நகா்மன்றத்துக்குள்பட்ட 10 முதல் 18 வரையுள்ள 9 வாா்டுகளுக்கு கோட்டை வேலு பெஸ்ட் மஹாலில் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், பொதுமக்கள் வருவாய், உள்ளாட்சி, காவல், தொழிலாளா் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம், பிற்படுத்தப்பட்டோா் நலம், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி உள்ளிட்ட 13 துறைகளின் சாா்பில் வழங்கப்படும் 50-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெற முகாமில் மனு கொடுத்து தீா்வு காணலாம். குறிப்பாக வீட்டுவரி, திட்ட அனுமதி, குடும்ப அட்டை, புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயா் மாற்றம், வருமானம், இருப்பிடம், சாதி சான்று, மானிய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம் என நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com