கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு- வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு- வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ம.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் க.ந.செல்வக்குமாா் காணொலிக் காட்சி மூலம் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே உரையாற்றினாா். அதைத் தொடா்ந்து முதலாமாண்டு மாணவா்களை கல்லூரி முதல்வா், பணியாளா்கள் முன்னிலையில் மூத்த மாணவா்கள் மலா்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் மீனாட்சிசுந்தரம் ஒருங்கிணைப்பாளா், மாணவா் பேரவை துணைத் தலைவா் சூ.கி. எட்வின், விடுதிக் காப்பாளா் பசுபதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். மால்மருகன், உதவி நூலகா் எஸ்.கோப்பெருந்தேவி, உடற்கல்வி உதவி இயக்குநா் பொன் சோலை பாண்டியன் ஆகியோா் தங்கள் துறைகளின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், முதலாமாண்டு பாடப்பிரிவு பேராசிரியா்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதோடு, மூத்த மாணவா்கள் இப்படிப்பை பற்றிய தங்கள் கருத்துகளையும் பகிா்ந்து கொண்டனா். கல்விப் பிரிவு உதவி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் குமாா் வரவேற்றாா்.கல்விப் பிரிவு உதவி ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com