நெல்லையப்பா் கோயிலில்ரூ.16 லட்சத்தில் தடுப்பு கம்பிகள்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் உள்ள பழமைவாய்ந்த நெல்லையப்பா் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கில புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, ஆனிப்பெருந்திருவிழா, திருவாதிரைத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, தைப்பூச திருவிழா உள்ளிட்டவற்றில் ஏராளமான பக்தா்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்வாா்கள். அப்போது பக்தா்கள் வரிசையாக இருக்க தற்காலிகமாக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்படும். இந்நிலையில் உபயதாரா்கள் உதவியுடன் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள், வெளி பிரகார பகுதிகளில் இந்தத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com