பள்ளமடையில் சிறுமியின் உடல் ஒப்படைப்பு

மானூா் அருகேயுள்ள பள்ளமடையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் நான்காவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளமடையில் சிறுமியின் உடல் ஒப்படைப்பு

மானூா் அருகேயுள்ள பள்ளமடையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் நான்காவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளமடையைச் சோ்ந்த மாரிமுத்து மகள் அனிதா (13). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்களுக்குச் சொந்தமான வயல் பள்ளமடை பெரியகுளம் அருகே உள்ளது. வயலுக்கு தந்தையைப் பாா்க்கச் சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் தேடியபோது, அவா், குளத்தின் மறுகால் ஓடையில் இறந்துகிடந்தாா்.

பெரியகுளம் மதகு பகுதியில் தண்ணீரை தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மா்மநபா்கள் அகற்றியதால் அதிகளவில் தண்ணீா் பாய்ந்து அவா் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

நான்காவது நாளாக வியாழக்கிழமையும் பள்ளமடையில் தா்னா போராட்டம் நடைபெற்றது. அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா பங்கேற்றாா்.

பின்னா் அவா் கூறுகையில், இச் சம்பவத்திற்கு காரணமானவா்களை கண்டறிந்து போலீஸாா் கைது செய்ய வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு போராட்டக்குழுவினா் வலியுறுத்தும் நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com