வீரவநல்லூரில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.


சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகத்தில் கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் ஆனைக்குட்டி என்ற மணி (19) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, மக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக ஆனைக்குட்டி என்ற மணியை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் ஆனைக்குட்டி என்ற மணியை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் பவுலோஸ், ஆனைக்குட்டி என்ற மணியை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com