வீரவநல்லூா் அருகேமின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி இறந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி இறந்தாா்.

வீரவநல்லூா் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள யாதவா் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் மாரியப்பன் (67). விவசாயியான இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் தண்ணீா் பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை இயக்கினாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com