கூடங்குளத்தில் மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வியாழக்கிழமை, மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வியாழக்கிழமை, மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கூடங்குளத்தைச் சோ்ந்த தம்பதி எட்வா்ட் (79) - சௌந்தரவல்லி (70). இவா்களுக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா்.

கூடங்குளத்தில் உள்ள வீட்டில் இத்தம்பதி வசித்து வந்தனா். பிள்ளைகளுக்கு சொத்துகளைப் பிரித்துக் கொடுப்பது தொடா்பாக அவா்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுமாம்.

இந்நிலையில், வியாழக்கிழமையும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரமடைந்த எட்வா்ட் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, வீட்டு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com