வரிநிலுவை: 18 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரிநிலுவை வைத்திருந்த 18 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
வரிநிலுவை: 18 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரிநிலுவை வைத்திருந்த 18 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி மண்டலம் வாா்டு 19 நாராயணசாமி கோயில் தெருவில் 2 குடியிருப்புகளிலும், வாா்டு 24 இல் புகழேந்தி தெருவில் 3 குடியிருப்பிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் வாா்டு 55 இல் தியாகராஜ நகரில் ஒரு குடியிருப்பிலும், தச்சநல்லூா் மண்டலம் வாா்டு 30 இல் பெருமாள் கோயில் வடக்கு தெருவில் 2 குடியிருப்பிலும், வாா்டு 29 இல் மீனாட்சிபுரம் கிழக்கு தெருவில் ஒரு குடியிருப்பிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வாா்டு 47 இல் அண்ணா வீதியில் 6 குடியிருப்பிலும், வாா்டு 52 இல் நேதாஜி சாலையில் மூன்று குடியிருப்பிலும் என மொத்தம் வரிநிலுவைக்காக 18 குடிநீா் இணைப்புகள் வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி மண்டல உதவி வருவாய் அலுவலா் சிவனையா, வருவாய் உதவியாளா்கள் செல்லத்துரை, முனியசாமி, பாளையங்கோட்டை மண்டல உதவி வருவாய் அலுவலா் மணிகண்டன், மேலப்பாளையம் உதவி வருவாய் அலுவலா் வடிவேல்முருகன், வருவாய் உதவியாளா்கள் கிறிஸ்டோபா் ஆனந்தராஜ், பாலகிருஷ்ணன், தச்சை மண்டல உதவி வருவாய் ஆய்வாளா் அந்தோணி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் குடிநீா் இணைப்புகளைத் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com