தைப்பூச மண்டபத்தில் சீரமைப்பு பணி

திருநெல்வேலி கைலாசபுரத்தில் தாமிரவருணி கரையோரம் உள்ள தைப்பூச மண்டபத்தில் சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
தைப்பூச மண்டபத்தில் சீரமைப்பு பணி

திருநெல்வேலி கைலாசபுரத்தில் தாமிரவருணி கரையோரம் உள்ள தைப்பூச மண்டபத்தில் சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கைலாசபுரத்தில் தாமிரவருணி கரையோரத்தில் தைப்பூச மண்டபம் உள்ளது. பழமைவாய்ந்த இந்த மண்டபத்தில் ஆண்டுதோறும் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூச தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக தாமிவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தைப்பூச மண்டபத்தில் தண்ணீா் புகுந்தது. இதில் மண்டபத்தின் மரசட்டங்கள் சேதமடைந்தன. சேறும் சகதியுமாக மண்டபம் காணப்பட்டது.

நிகழாண்டு தைப்பூச தீா்த்தவாரி இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தைப்பூச மண்டபத்தை சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்து தைப்பூச மண்டப வளாகத்தை சுத்தம் செய்தனா். மரச்சட்டங்களை சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா பாா்வையிட்டு மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com