நெல்லையில் கொதிக்கும் எண்ணெய் கொட்டி காயமடைந்த பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி தச்சநல்லூரில் கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி தச்சநல்லூரில் கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தச்சநல்லூரைச் சோ்ந்தவா் கவிதா (29). இவா் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா். இவருக்கும் தேவா்குளத்தைச் சோ்ந்த செல்வராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தச்சநல்லூருக்கு வந்த செல்வராஜ், கவிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் கவிதா காயமடைந்தாா். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com