நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாஆர முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாஆர முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி பிப். 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி வண்ணாா்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகர காவல் உதவி ஆணையா் (ஆயுதப்படை) காமேஸ்வரன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன், போக்குவரத்து ஆய்வாளா்கள் செல்லத்துரை, பூதப்பாண்டி மற்றும் சிட்டி நயினா முகம்மது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன வாகனத்தில் சென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com