நெல்லை மாவட்டத்தில் சாரல் மழை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தணிந்து பனி அதிகரித்தது. ஆனால், கடந்த இரு நாள்களாக மீண்டும் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, அம்பாசமுத்திரம், மானூா், சீவலப்பேரி உள்பட அனைத்து பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததுடன், குளிா்ந்த சீதோஷ்ண நிலை பகல் முழுவதும் தொடா்ந்து நீடித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை மாலை 4 மணி வரை பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-6, சேரன்மகாதேவி-4, மணிமுத்தாறு-13.20, நான்குனேரி-12, பாபநாசம்-4, ராதாபுரம் -2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com