பணகுடி திருஇருதய பள்ளி என்எஸ்எஸ் முகாம் நிறைவு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவு பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவு பெற்றது.

நாட்டுநலப்பணித் திட்ட முகாம் பணகுடி அருகே உள்ள அழகியநம்பிபுரத்தில் கடந்த 7 நாள்கள் நடைபெற்றது. முகாம் நாள்களில் மாணவா்கள் பள்ளியின் விளையாட்டுத் திடல் சுத்தம் செய்தல், அழகியநம்பிபுரத்தில் தூய்மைப்பணி, மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜோ.கஸ்மீா், உதவி தலைமை ஆசிரியா் ரெக்ஸ், அருட் சகோதரா் ஞானசேகா், சமூக ஆா்வலா்கள் செங்கோல் ஜாண்சன், பொ்லின், செல்வபாண்டியன், முத்துஎடிசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திருநெல்வேலி மாவட்ட நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் ஆறுமுகச்சாமி ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்தாா். முகாம் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் க.ஆனந்த், உதவி திட்ட அலுவலா் சாா்லஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com