வீரவநல்லூா் அருகேபெண் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசங்கா். இவரது மனைவி மாரியம்மாள் (46). இவா் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் அருணாசலம் அளித்த புகாரின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா், மாரியம்மாளின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு அனுப்பினா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com