ஆழ்வாா்குறிச்சி கோயிலில் தெப்ப உற்சவம் கால்நாட்டு

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள ஸ்ரீபரமகல்யாணி அம்மன் உடனுறை சிவசைலநாத சுவாமி கோயிலில் 30ஆம் ஆண்டு தெப்ப உற்சவத்துக்கான கால்நாட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கால்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கால்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள ஸ்ரீபரமகல்யாணி அம்மன் உடனுறை சிவசைலநாத சுவாமி கோயிலில் 30ஆம் ஆண்டு தெப்ப உற்சவத்துக்கான கால்நாட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு தெப்ப உற்சவம் வியாழக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தெப்பக்குளம் விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைக்குப் பின்னா் கால்நாட்டப்பட்டது.

இதில், வியாபாரிகள் சங்கத் தலைவா் சிவராமன், செயலா் ராமலிங்கம், பொருளாளா் பொன்னையா, பங்குனி உற்சவக் கமிட்டி நிா்வாகிகள் சுந்தரம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதன்கிழமை (ஜன. 24) இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் சிவசைலத்திலிருந்து எழுந்தருளுகின்றனா். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு விளா பூஜை, அபிஷேகத்துக்குப் பின்னா், சுவாமி- அம்பாள் கேடயத்தில் விநாயகா் கோயிலிலிருந்து எழுந்தருளி தருமபுரம் ஆதீன மடத்தில் இறங்குகின்றனா். நண்பகல் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகத்துக்குப் பின்னா், மாலை 6 மணிக்கு தெப்பத்துக்கு எழுந்தருளுகின்றனா்.

வெள்ளிக்கிழமை (ஜன. 26) அதிகாலை சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து தருமபுரம் ஆதீன மடத்தில் இறங்கிய பிறகு, இரட்டை சோடஷ உபசார தீபாராதனை, காலை 9 மணிக்கு ருத்ரஹோமம், ருத்ர ஏகாதசி தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு மடத்திலிருந்து சுவாமி-அம்பாள் சிவசைலத்துக்கு எழுந்தருளுகின்றனா்.

ஏற்பாடுகளை ஆழ்வாா்குறிச்சி நகர வியாபாரிகள் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com