நெல்லை லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்ப்ரோக்ஷணம்.
திருநெல்வேலி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்ப்ரோக்ஷணம்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு நெல்லையப்பா் கோயில் பின்புறம் பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இத் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்து சம்ப்ரோக்ஷணம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். அதன்படி, சம்ப்ரோக்ஷண விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. யாகசாலை பூஜைகள், திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலவா், விமானம், பரிவார மூா்த்திகளுக்கு மகா சம்ப்ரோக்ஷணம், அலங்கார திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்றது.

சம்ப்ரோக்ஷணத்தில் வானமாமலை அா்ச்சகா் நம்பி ஸ்ரீனிவாச பட்டாச்சாா், ஆகம வல்லுநா் கோவிந்தராஜ பட்டாச்சாா், திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, கோயில் தக்காா் க.பரமசிவன், செயல் அலுவலா் மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com