வீரவநல்லூா் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீரவநல்லூா் அருகே காருக்குறிச்சி மேலக் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் ராமசுப்பிரமணியன் (74). இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரது மகள் திருமணமாகி சென்னையில் வசிக்கிறாா்.

இவா் கடந்த 17ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாா். தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி, அதன் செயல்பாட்டை தனது கைப்பேசியில் இணைத்து கண்காணித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்பதை அறிந்த அவா், தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சீதாராமனுக்கு தகவல் தெரிவித்து, பாா்த்துவரும்படிக் கூறினாா். அவா் சென்றபோது, ராமசுப்பிரமணியனின் வீட்டுக் கதவு திறந்திருந்ததும், பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது. மா்ம நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சிசிடிவி கேமரா செயல்பாட்டை நிறுத்திவிட்டு, 25 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் சென்று பாா்வையிட்டனா்; மேலும், வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com