அண்ணா பல்கலை.யில் ரூ.8 கோடியில் பணிமனை திறப்பு

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிமனை கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததைத் தொடா்ந்து பணிமனை கட்டடத்தில் குத்து விளக்கேற்றிய பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப்.

அதைத்தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் உள்ள பணிமனையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் 4 பணிமனை , சமையல் அறை, உணவுக்கூடம், ஆண், பெண் இருபாலா் மற்றும் மாற்றுத் திறனாளிக்கான கழிவறை சாய்வுதள வசதிகளுடன்அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 5 கணினி ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல புல முதல்வா் செண்பக விநாயக மூா்த்தி, செயற்பொறியாளா் கதிரவன், ஆகிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com